• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்றத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு…. முத்தரசன் குற்றச்சாட்டு

Byகாயத்ரி

Dec 17, 2021

வாரணாசியில் பிரதமரே மதகலவரத்தை துண்டும் விதமாக பேசுவது நாட்டிற்கு கேடு விளைவிக்கும் – சிவகங்கையில் முத்தரசன் பேட்டி

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் பேசும்போது பதிலளிக்க வேண்டிய பிரதமர் அவையில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு வேறு பணிக்கு செல்கின்றார்.

என்று குற்றம் சாட்டிய முத்தரசன்.பல்லாயிரம் கோடி வங்கி கடனை பெற்றுக்கொண்டு வெளிநாடு சென்றவர்களிடம் கடனை வசூல் செய்யாமல், பொது துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க்கும் மோசமான கொள்கையை மத்திய அரசு பின்பற்றுகிறது என தெரிவித்தார்.

மேலும் உரம் தட்டுபாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடளுமன்றத்தில் பெண்களுக்க இட ஒதுக்கிட்டினை நிறைவேற்றிட வேண்டும் அதிகரிக்கும் இளம்பெண்களின் தற்கொலையை தடுக்க நாடாளுமன்றத்தில் கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என முத்தரசன் வேண்டுகோள் விடுத்தார்.