உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ள அழகிகள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி அமெரிக்க தீவானா பியூர்ட்டோ ரிக்கோவில் நேற்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உலக அழகி போட்டியில் பங்கேற்க இருந்த பல அழகிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என மொத்தம் 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், இந்தியா சார்பில் பங்கேற்கும் மாடல் அழகி மானசா வாரனாசியும் அடங்குவார்.போட்டியாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.