• Fri. Apr 26th, 2024

மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம்

ByKalamegam Viswanathan

Apr 22, 2023

கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 2013).

சகுந்தலா தேவி நவம்பர் 04,1939ல் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார். தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில், அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார். 1944ல் தன் தந்தையுடன் லண்டன் சென்ற சகுந்தலா 1960ன் மத்தியில் இந்தியா திரும்பினார். கொல்கத்தாவை சேர்ந்த பரிடோஸ் பேனர்ஜி என்னும் IAS அதிகாரியை மணந்தார். இவர்களுக்கு 1979ல் விவாகரத்து ஆனது.

சகுந்தலா தேவி தனது கணித திறனை காண்பிக்க உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். இவற்றில் 1950ல் ஐரோப்பா மற்றும் 1976 ல் நியூயார்க் பயணமும் முக்கியமானவை. 1988ல் ஆர்தர் ஜென்சென் என்ற கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் பேராசிரியர் தேவியின் கணித திறனை பரிசோதித்தார். அவற்றில் பெரிய எண்களை கொண்ட கணக்குகளும் அடக்கம். உதாரணமாக 61,629,875 என்ற எண்ணின் கன மூலமும் 170,859,375 என்ற எண்ணின் ஏழாவது மூலமும் கேட்கப்பட்டன. இதில் விந்தை என்னவெனில் ஆர்தர் கேள்வியை தேவியிடம் கேட்டுவிட்டு அவரது நோட்டு புத்தகத்தில் கேள்வியை குறிப்பதற்குள் தேவி பதிலை துல்லியமாக சொன்னதுதான். 1990ல் ஆர்தர் தனது ஆய்வின் முடிவை intelligence என்ற கல்வி இதழில் வெளியிட்டார்..

சகுந்தலா தேவி ஜோதிடத்திலும் தேர்ந்தவர் ஆவார். இவர் சமையல் குறிப்பு, கற்பனை நாவல்கள், புதிர் புத்தகங்கள் பலவற்றை எழுதி உள்ளார். கணித மேதை சகுந்தலா தேவி தான் இந்தியாவில் ஒரு பால் ஈர்ப்பை பற்றி மிகவும் வெளிப்படையாக முதலில் “The World of Homosexuals” எனும் புத்தகத்தை எழுதியவர். 1977ல் 188,132,517 என்ற எண்ணின் கன மூலத்தை வேகமாக கணக்கிடுவதில் கணினியை தோற்கடித்தார். அதே ஆண்டில், தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை 50 நொடிகளில் 546,372,891 கணக்கிட்டார். இதை யூனிவாக்-1108 என்ற கணினியை விட 12 வினாடிகள் விரைவாக செய்து முடித்தார். ஆனால் அதனை சரிபார்க்க U.S. Bureau of Standards யுனிவாக் 1101 என்ற கணினியில் சிறப்பு நிரல் ஒன்றை நிறுவியது குறிபிடத்தக்க விஷயமாகும்.

ஜூன் 18, 1980ல் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கணினி துறை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க ஐக்கிய எண்கள் 7,686,369,774,870 × 2,465,099,745,779 லை பெருக்கி சரியாக 28 வினாடிகளில் 18,947,668,177,995,426,462,773,730 பதில் அளித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவியின் பிறந்த நாளான நவம்பர் 4 2013ல் கூகிள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சகுந்தலா தேவியின் படத்தை வெளியிட்டு அவருக்கு மரியாதையை செய்தது.

சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி ஏப்ரல் 21, 2013ல் தனது 83வது அகவையில் பெங்களூரில் சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு பிரிந்தார். கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். ஆனால் மனித-கணினி என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Related Post

SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *