தேவையான பொருட்கள்:
கோதுமைமாவு -200கிராம்,
சீனி -300கிராம்
நெய் -பொரித்து எடுக்க தேவையான அளவு,
மில்க்மெய்ட்(அ) பால் பவுடர்
பால் -தேவையான அளவு
செய்முறை:
கடாயில் சிறிது நெய் ஊற்றி கோதுமை மாவை சிறிது நேரம் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இந்த மாவுடன், பால் பவுடர், பால் ஊற்றி நன்கு பிசைந்து ஒன்றரை மணி நேரம் வைத்துவிடவும். சீனியில் சற்று நீர், கேசரி பவுடர் போட்டு பாகு போல ஜீரா செய்து வைத்துக்கொண்டு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நெய்யில் பொரித்து ஜீராவில் போட்டு 2மணி நேரம் ஊறிய பின் சாப்பிடலாம்.