தேவையான பொருட்கள்:
அவித்தமுட்டை-3
மிளகாய் பொடி
சீரகம் மிளகு- தலா அரை டீஸ்பூன்
உப்பு -சிறிது
கோதுமை மாவு-1கப்
செய்முறை:
முட்டையை நன்கு துருவி அதனுடன் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்ந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி வைத்து கொள்ள வேண்டும். கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து உருண்டைகளாக செய்து வைத்துகொண்டு, சப்பாத்திக்கு தேய்ப்பது போல திண்ணமாக இல்லாமல் மெல்லிய தாக தேய்த்துக் கொண்டு முட்டை மசாலாவை சப்பாத்தியின் ஒரு ஓரமாக 2(அ) 3 டேபிள்ஸ்பூன் வைத்து மறு பாதி சப்பாத்தியை மசாலாவை மூடி ஒரங்களை நன்கு இணைத்து அடுப்பில் தோசைக்கல்லில் வைத்து எண்ணெய் நிறைய ஊற்றி இருபுறமும் மொறுமொறுப்பாகவும் வேக விடவும், குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.