தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்.29) நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மே 1ஆம் தேதியில் மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]