மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 4 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்கள் 4 பேர் என மொத்தம் 8 வீரர்கள் களம் கண்டனர். இதில் 1 ரவுண்டிற்கு ஆண்கள் போட்டியில் 6 சுற்றுகளும் பெண்கள் போட்டியில் 4 சுற்றுகளும் நடைப்பெற்றது. இந்த போட்டியில் முக்கிய வீரராக சிங்கள குத்து சண்டை வீரர் நிரஞ்சன எதிர்த்து தமிழக குத்துச்சண்டை வீரர் பாலீ சதீஷ்வர் போட்டியிட்டு வெற்றி பெற்று பதக்கம் மற்றும் 10 லட்சம் காசோலைகளை பெற்றார். போட்டியில் தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக சிலம்பம் , கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. சர்வதேச அளவில் நடைபெற்ற குத்து சண்டையை காண ஏராளமான குத்துச்சண்டை வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் கூறுகையில், ‘சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாகும். மேலும் பல்வேறு வெளிநாடுகளில் நடக்கும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற இப்போட்டி தங்களுக்கு உறுதுணையாக இருந்ததாகவும்’ தெரிவித்தனர்.