• Wed. Apr 17th, 2024

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதி:மத்திய அரசின் புது திட்டம்

சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்கி கொள்வதற்கென்று மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மகளிர் விடுதிகளில் கட்டணங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். அதுவே அரசு விடுதிகளில் தங்கினால் அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது.

அதனால் அரசு மகளிர் விடுதிகளை அதிகரிக்குமாரு பலரும் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்நிலையில் மகளிர் தங்கும் விடுதிகள் பற்றாக்குறையாக இருப்பதாக திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதில் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் நலனுக்காக உள்ள விடுதிகளில் கடுமையாக நிலவி வரும் பற்றாக்குறையை நீக்க மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மகளிர் விடுதிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? இதுபோன்ற மகளிர் விடுதிகள் எத்தனை செயல்பாட்டு வருகிறது? என்று கேள்வி எழுப்பினார்.


இதுகுறித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி ஸ்மிரிதி ராணி கூறுகையில், “வேலைக்கு செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதிகளில் இதுவரை பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை.

மேலும் சரியாக இன்றைய நிலவர கணக்கெடுப்பின்படி, மொத்தமாக இந்தியாவில் 497 மகளிர் விடுதிகள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அதில் குறிப்பாக தமிழத்திற்கு 97 விடுதிகளை அமைத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் தற்போது 67 மகளிர் விடுதிகள் செயல்பாட்டுக்கு வந்து இயங்கி கொண்டு இருக்கின்றது”, என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *