• Thu. Apr 25th, 2024

லஞ்சத்திற்காக சாமான்யனின் 6 லட்சத்தை தண்டமாக்கிய அரசு அதிகாரிகள்..

Byமகா

Sep 7, 2022

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்க இயந்திரம் வாங்க அமைச்சர் பெயர் கூறி மிரட்டிய கோவை நிறுவனம். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் ரத்து செய்த குழித்துறை நகராட்சி அதிகாரிகள்.  ஒப்பந்தத்தை இழந்ததால் 6-லட்சத்தை இழந்து நிற்பதாக  ஒப்பந்த காரர் வேதனை தெரிவித்துள்ளார்.

குழித்துறை நகராட்சி

குழித்துறை நகராட்சிக்கு shreddercum pulver 2ir என்ற இயந்திரம் வாங்கி பொருத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இதன் மூலம் திறந்தவெளி ஒப்பந்த முறையில்  நுண் உயிர் உரம் தயாரிக்கும் இயந்திரம் வாங்கிக்கொடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒப்பந்ததாரராக ஜிபின் என்பவர் ஒப்பந்த புள்ளியில் கலந்துக்கொண்டுள்ளார். அந்த ஒப்பந்தபுள்ளி இவருக்கு கிடைத்த பட்சத்தில் அதை ரத்து செய்து மீண்டும் ஒப்பந்த புள்ளியில் கலந்துகொள்வதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் படி தொடர்ச்சியாக மூன்றுமுறை ரத்து செய்துவிட்டு, நான்காவது முறையும் ஒப்பந்த புள்ளியில் கலந்துகொள்வதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நான்காவது முறையும் ஒப்பந்தம் அவருக்கே கிடைத்த நிலையில், இந்த அறிவிப்பில் KEW என்ற விற்பனையாளரிடம் தான் இயந்திரம் வாங்க வேண்டுமென தெளிவாக அதில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதுவரை வந்த எந்த அறிவிப்பிலும் இவர்களிடம் தான் வாங்க வேண்டுமென்ற எதுவும் குறிப்பிடவில்லை என்று ஜிபின் குறிப்பிட்டுள்ளார்.

ஜிபின்(பாதிக்கப்பட்டவர்)

இதைபற்றி நகராட்சி பொறியாளரிடம்(perinbam Samuel)  கேட்டபோது அது எழுத்து பிழை, நீங்கள் உங்கள் செடியூலில் என்ன குறிப்பிடபட்டுள்ளதோ அதுபடி தரமான இயந்திரத்தை வாங்கி கொடுக்க கூறியுள்ளார். அவர் கூறியதுபோல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ISO சான்றிதழ் பெற்ற தரமான நிறுவனத்திடம் முழு தொகையை செலுத்தி வாங்கி கொடுத்துள்ளார் ஜிபின். இந்த இயந்திரத்தை வாகனத்தில் இருந்து இரக்கவும் விடாமல், சோதித்தும் பாராமல் சுகாதாரத்துறை ஆய்வாளர் ஸ்டான்லி குமார் இந்த இயந்திரம் ஒரு ப்ளாட்ஃபார்ம் நீயும் ப்ளாட்ஃபார்ம் என்று தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.

மேலும், நான் கூறிய இடத்தில் இயந்திரம் வாங்கியிருந்தால் 40% லஞ்சம் கிடைத்திருக்கும், நீயும் அதேபோல் 40% லஞ்சம் கொடுத்தால் இந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்வோம் இல்லையென்றால் இந்த இயந்திரம் தரமற்றது என்று சான்றிதழ் கொடுத்துவிடுவோம் என்று நகராட்சி பொறியாளரும், சுகாதாரத்துறை ஆய்வாளரும் கூறியுள்ளனர். லஞ்சம் கொடுக்க மறுதத்தால் ஜிபின் வாங்கி வந்த இயந்திரம் தரமற்றது என சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொன்ன இடத்தில் வாங்க வேண்டுமென்று 27-1-2022 அன்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. முழுத்தொகை கட்டி இயந்திரம் வாங்கிவிட்டு தற்போது உயர் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், தானும் , தன் குடும்பமும் மன உலைச்சலில் இருந்து வருவதாக ஜிபின் தெரிவித்துள்ளார்.

இதுபோக, இவரின் இயந்திரம் தரமற்றது என தடை விதித்து, இவரின் பணி உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. இவரின் பணி உத்தரவில் இல்லாத வேலைகளை கூறி 6 லட்சத்திற்கு நஷ்டம் அடைய செய்துள்ளதாக ஜிபின் குற்றம் சாட்டியுள்ளார். குழித்துறை நகராட்சி பொறியாளரும், சுகாதாரத்துறை ஆய்வாளரும் சொன்ன இடத்திலிருந்து ஹரிகிருஷ்ணன் என்பவர் அமைச்சர் நேருவின் பெயரை சொல்லி என்னிடமிருந்துான் நீ இயந்திரம் வாங்க வேண்டும்.. வாங்கிவில்லை என்றால் எப்படி நீ இயந்திரம் வைக்க போகிறாய் என்று நான் பார்க்கிறேன் என மிரட்டம் தொனியில் கேட்டுள்ளார்.ஜிபினுக்கு கொடுத்த பணி உத்தரவை இன்னொருவரிடம் கொடுத்து இயந்திரம் வாங்க வைத்துள்ளனர். ஆனால் அதன் தரம் குறைவாகவே இருந்துள்ளது. எந்த குறையும் இல்லாமல் நான் எடுத்து வந்த இயந்திரத்தை பொய்யாக தரமற்றது என ஜோடித்து விட்டனர். ஆனால் இதை ஏன் தற்போது கண்டுக்கொள்ளவில்லை என ஜிபின் கேள்வி எழுப்பியுள்ளார்.  

அமைச்சர் கே.என்.நேரு

ஏற்கனவே துப்பரவு பணியாளர்கள் விவகாரத்தில் சிக்கியிருக்கும் சுகாதாரத்துறை ஆய்வாளர் ஸ்டான்லி குமார் மேலும் இந்த இயந்திரம் வாங்கும் சர்ச்சையிலும் ஈடுபட்டுள்ளார். லஞ்சம் வாங்கும் பொருட்டில் ஒரு சாமான்யனை இந்த அதிகாரிகள் இவ்வளவு கொடுமை படுத்தியுள்ளனர். இதற்கு எப்போது தான் தீர்வு.. பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பக்கம் சாய்ந்து பேசுவது எப்படிப்பட்ட இழுக்கு என்பதை அறியாமல் செய்து வருகின்றனர். இதை கவனத்தில் எடுக்குமா அரசு..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *