மத்திய அரசிற்கு உட்பட்ட கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (ECL) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 313 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (ECl)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 313
பணி : Mining Sirdar
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.31,852 மாதம்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.easterncoal.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 10.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.easterncoal.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.