
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை திடீரென உயர்ந்து வருகிறது. ஜன.3-ம் தேதி .58,080 ரூபாயாகவும், ஜன.16-ம் தேதி 59,120 ரூபாயாகவும் இருந்தது. ஜன.22-ம் தேதி பவுன் தங்கம் 60 ஆயிரம் ரூபாயைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.
ஆனாலும், கடந்த 29-ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஜன.31-ம் தேதி ஆபணத்தங்கம் .61 ஆயிரம் ரூபாயையும், பிப்.1-ம் தேதி .62 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 65,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,230 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து 112.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 112,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
