• Tue. Apr 22nd, 2025

ஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு

ByP.Kavitha Kumar

Mar 15, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய்க்கு குறைந்து, 65,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை திடீரென உயர்ந்து வருகிறது. ஜன.3-ம் தேதி .58,080 ரூபாயாகவும், ஜன.16-ம் தேதி 59,120 ரூபாயாகவும் இருந்தது. ஜன.22-ம் தேதி சவரன் தங்கம் 60 ஆயிரம் ரூபாயைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.

ஆனாலும், கடந்த 29-ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஜன.31-ம் தேதி ஆபணத்தங்கம் .61 ஆயிரம் ரூபாயையும், பிப்.1-ம் தேதி .62 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. இந்நிலையில் சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 65,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,230 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 65,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 8,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.