• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஒரு சவரன் தங்கம் விலை 64,520 ரூபாய்: ஒரே நாளில் ரூ.360 உயர்வு!

ByP.Kavitha Kumar

Mar 12, 2025

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 64,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 4-ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 64,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்கம் விலை நேற்று, சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 64.160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் .8,065 ரூபாய்க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 64,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.