• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Byவிஷா

Apr 19, 2025

இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1800 ரூபாய் வரையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 71,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,945 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் 9758 ரூபாயாகவும், ஒரு சவரன் 78,064 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றும் இன்றி ஒரு கிராம் 110 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.