



கடந்த 5 நாட்களில் தங்கம் விலை ரூ.2,680 வரை குறைந்த நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களில் குறைந்து வந்தது. நேற்று முன்தினம் வரை 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூபாய் 2,680 குறைந்தது. தங்கம் விலை கடந்த 4 ஆம் தேதி ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5 ஆம் தேதி கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை நோக்கித் திரும்பியது. மதுரையில் நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்தது. நேற்று மதியம் மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1,200 உயர்ந்துள்ளது. கோவை, மதுரையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை, மதுரையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 150 உயர்ந்து ரூபாய் 8,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

