• Tue. Apr 23rd, 2024

இனிமேல் வாரம் ஒரு காற்றழுத்தம்: ஜனவரி வரை மழை தான்

Byமதி

Dec 1, 2021

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த ஆசியப் பகுதியில் குறிப்பாக தென் சீனக் கடல், தாய்லாந்து வளைகுடா, வங்கக் கடல் ஆகியவை இணைந்த அமைப்பும், குமரிக்கடல், அரபிக் கடல் இணைந்த அமைப்பையும் நீண்ட கால வானிலை ஆய்வின்படி உற்றுநோக்கும் போது, அந்தமான் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, நவம்பர் 30ம் தேதி வங்கக் கடல் வழியாக ஆந்திரா- ஒடிசா பகுதிக்கு வரும் என்று உலக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதையே எதிர்பார்த்தும் உள்ளனர்.

இருப்பினும், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மாறும் போது, அது டிசம்பர் 3, 4, 5ம் தேதிகளில் தமிழகம் வழியாக அரபிக் கடல் நோக்கி செல்லும். அப்படி செல்லும் போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 2ம் தேதி வரை வெயில் நிலவும். அதனால் ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்யும். குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மழை பெய்யும். அதனால் நீலகிரியில் அதிக மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், தென் மாவட்டங்களில் சற்று அதிமாக மழை பெய்யும். இதையடுத்து, டிசம்பர் 6, 7ம் தேதிகளில் மழை இருக்காது. 7, 8ம் தேதிகளில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த காற்றழுத்தம் உருவாகி 9ம் தேதி மேற்கு நோக்கி நகர்ந்து 10, 11, 12ம் தேதிகளில் இலங்கை மற்றும் தமிழகத்துக்கு நெருங்கி வரும். அதன் காரணமாவும் தமிழகத்தில் மழை பெய்யும். அதற்கு பிறகு டிசம்பர் 15ம் தேதி வரை மழை பெய்யாமல் நின்று, 16ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை அடுத்த காற்றழுத்தம் ஏற்பட்டு மழை பெய்யும்.


டிசம்பர் 26ம் தேதிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகி டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை மழை பெய்யும். இதன்படி பார்த்தால் இடைவெளி விட்டு வாரம் ஒரு காற்றழுத்தம் வீதம் தமிழகத்துக்கு மழை கொடுக்க உள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் 4 காற்றழுத்தங்களும், ஜனவரி மாதத்தில் 3 காற்றழுத்தங்கள் என்று உருவாகி ஜனவரி மாதம் 24ம் தேதி வரை மழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *