• Tue. Feb 18th, 2025

முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன்…

Byகாயத்ரி

Mar 3, 2022

கடந்த பிப்.19 ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தலின் போது திமுக நிர்வாகி நரேஷ்குமாரை தாக்கி அரை நிர்வாணமாக்கிய வழக்கில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.