கடந்த 2 ஆண்டுகளாக மதுரை-செட்டிகுளம் இடையே மதுரை மாவட்டம் நத்தம் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில், ரூ.694 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு தொழிலாளிகள் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளி உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்பது தெரிய வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இன்னும் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு செல்லும் பகுதி இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் இடிபாடுகளில் வேறு யாரவது சிக்கியுள்ளார்களா என்பது குறித்து மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மதுரை நகராட்சி ஊழியர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்இந்த மேம்பாலம் பணியானது மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்துதான் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரையில் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி..!
