• Sat. Apr 20th, 2024

பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருவிழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தின் திருவிழா வரும் 29-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலம் திருவிழா நடைபெறும் 11 நாட்களும் மனித கடலாக காட்சியளிக்கும். அந்தளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அங்கு குவிவார்கள்.

திருவிழா நடைபெறும் 11 நாட்களும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். இதேபோல் வியாதிகளில் அவதிப்படுபவர்கள் குணம்பெற வேண்டி சிறப்பு வேண்டுதல் நிகழ்வும் நடத்தப்படும். கண்களில் கண்ணீர் கசிய உள்ளம் உருக ஆரோக்கிய மாதா ஆலயத்தில் பிரார்தனைகள் நடைபெறும்.

திருவிழா நடைபெறும் 11 நாட்களும் வேளாங்கண்ணி பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கவிடப்படும். செப்டம்பர் 8-ம் தேதி மாதாவின் திருவுருவம் தாங்கிய தேர்பவனி முடிந்த பின்னர் திருவிழா நிறைவு பெறும். மரியே வாழ்க என்ற விண்ணை பிளக்கும் பக்தர்களின் முழக்கங்களுடன் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த வேளாங்கண்ணி திருவிழா வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களின்றி நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணிக்கு வெளி மாவட்டத்தினர் யாரும் வருகைத் தர மாவட்ட நிர்வாக அனுமதி மறுத்துள்ளது.

அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு கொடியேற்றம், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட செப்.8 வரை அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *