

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் புகுந்தது.
தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது.
இந்நிலையில் மேட்டூரில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
ஆபத்தை விளைவிக்கும் வகையில் காவிரி கரைக்கு செல்லவும், செல்ஃபி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு பொது மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
