பாகிஸ்தானில் முதல் இந்து பெண் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பதவி ஏற்றுள்ளார்.
பாகிஸ்தானில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக முக்கிய பொறுப்பில் இருப்பார்கள். அங்கு பெண்கள் உயர் அதிகாரிகளாக இருப்பது மிகவும் அரிது.அதிலும், குறிப்பாக பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களில் பெண்கள் உயர்பதவிகளில் இருப்பது மிகவும் கடினம். அப்படிப்பட்ட சாதனையை பாகிஸ்தான் காவல்துறையில் செய்துள்ளார் 26 வயதான இந்து பெண்மணி மனிஷா ரோபேட்டா.
இவர் சிந்து பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ளார். ஒரு இந்து பெண் காவல்துறை உயர் பதவியை பாகிஸ்தானில் பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.