• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

“டி 3” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…

Byகாயத்ரி

Jul 29, 2022

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரபல தொகுப்பாளார் மற்றும் நடிகர் ப்ரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டி 3’. இந்தப் படத்தில் ப்ரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷனல் சார்பில் சாமுவேல் காட்சன் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த படம் ஒரே நாளில் நடக்கும் கதைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘டி 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் படகுக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.