நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி களுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி பெற்றது போல் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் 100 சதவீத வெற்றியை பெறும் வகையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து ஒன்றியம் மற்றும் நகரங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று தென்காசி நகர திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், தென்காசி நகர செயலாளர் சாதிக், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் மாரிமுத்து, நெசவாளர் அணி அமைப்பாளர் சுப்பையா முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோமதிநாயகம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.