

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர்நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் ஆகியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் துவங்கியது.
நாகர்கோயில், குளச்சல், தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை யாகவும் சில பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்ததோடு ஆறுகள் கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த வண்ணம் உள்ளது.

கடந்த சில நாட்களாக காணப்பட்ட விடுமுறைக்கு பின்பு இன்று வழக்கம் போல் தங்கள் பணிகளை துவங்கிய பொதுமக்களுக்கு இன்றைய மழை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதோடு கருமேகம் சூழ்ந்துள்ள நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
