• Sat. Feb 15th, 2025

புனித் நினைவிடத்தில் குவியும் பொதுமக்கள்

Byமதி

Nov 8, 2021

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தினந்தோறும் 30,000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொட்டும் மழையிலும் புனித்ராஜ்குமார் நல்லடக்கம் செய்யப்பட்ட கண்டீவராவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. புனித்ராஜ்குமார் இறந்து 10 நாட்களாகிவிட்டது. ஆனால் இன்னும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் ரசிகர்களின் கூட்டம் என்பது குறையவேயில்லை. பல்வேறு வயதுக்குட்பட்டவர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் உள்பட 300க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12 மணி நேர ஷிப்ட்களின் அடிப்படையில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.