லோன் வாங்கி தருவதாக கூறி இடத்தை அபகரிப்பு செய்த நபர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜன் அவர் தனது சொந்த இடத்தை தனது மனைவி மற்றும் மகள் பெயரில் கிரைய பத்திரம் பதிவு செய்துள்ளார் தற்போது அவர் இறந்த நிலையில் அந்த இடத்தினை அதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆலங்குளம் காவல் நிலைத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தனது குடும்பத்தினர் மீது கொலைவெறிதாக்குதல் நடத்திய சண்முகவேல் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வராத நிலையில் தொடர்ந்து தங்களுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வருவதால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் மேலும் சண்முகவேல் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யவும் கொலை மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்க்கு உத்தரவிட கோரி பாதிக்கப்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.