• Tue. Apr 16th, 2024

முன்னாள் அமைச்சர் தலைமையில் அள்ள அள்ள மணல் கொள்ளை!

Byமதன்

Jan 13, 2022

ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் கொள்ளை லாபத்தில் மணல் கொள்ளை முன்னாள் அமைச்சர் தலைமையில் படுஜோராக நடைபெற்று வருகிறது.

வேலூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சுற்றுலா பகுதிகள் ஆற்று மணல் விற்பனை தமிழக அரசாங்கம் மூலம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசால் விலை நிர்ணயம் செய்து மக்கள் பயன்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால் கொள்ளை லாபத்தில் மணல் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.அதிகாலை மூன்று மணிக்கு மணல் எடுக்கக்கூடாது என்று அறிவித்தாலும் அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் பணி ஜரூராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எந்த இடத்தில் மணல் எடுக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டதோ அந்த இடத்தில் தான் அதிக மணலை அள்ளி நிலத்தடி நீருக்கு அபாயம் ஏற்படுத்துகின்றனர். இந்த கொள்ளை காலை 3 மணி முதல் சுமார் 7 மணி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு பட்ட பகலில் அரசு அறிவித்த படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மணலை கொள்ளையடித்து இரட்டை லாபம் பார்த்து வருகின்றனர். இவை அனைத்தும் தடுக்க வேண்டிய காவல்துறை தடுக்காமல், அதிகாரிகள் மாதா மாதமும் கட்டிங் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளவதில்லை . அவர்கள் தேவைக்கேற்றவாறு தேவையை பூர்த்தி செய்து மணல் கொள்ளையர்கள் விதமாய் அன்பளிப்பு மழையில் அதிகாரிகளை மகிழ்வித்தனர்.

இது ஒருபுறமிருக்க மணல் கொள்ளையை வெகு ஜோராக ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி ஆம்பூர் குடியாத்தம் கே வி குப்பம் காட்பாடி சமுத்திரம் ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் போன்ற இடங்களில் ஆற்றில் எடுக்கக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்த இடங்களில் கிளைகளை விரிவாக்கி மணல் அள்ளும் பணியை தீவிரபடுத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பெயரைச் சொல்லிக்கொண்டு ஜோலார்பேட்டையில் தனசேகர் செண்பக பகுதியை சேர்ந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் முருகன் கதிர் ஆனந்தகுமார் போன்றவர்கள் மாவட்டத்தை மாங்காய் கீற்று போல கூறுபோட்டு கூவி விற்றுவிட்டு லாபத்தில் முன்னாள் அமைச்சருக்கும் கப்பம் கட்டுகின்றனர். முன்னாள் அமைச்சரும் இதற்கு சாட்சி என்பதை சமீபத் தில் அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது 551 யூனிட் மணல் கண்டெடுக்கப்பட்டது அனைவருக்கும் சாட்சி.

காவல்துறை தன் பாக்கெட் நிரம்பினால் போதும் அது எப்படியாவது போகட்டும் என்று கண்டும் காணாதது போலவே செயல்படுவதுதான் வருத்தத்திற்கு உரிய செயல்.

இவர்கள் மீது வழக்குப் போட்டாலும் பணத்தை வைத்து சட்டத்தின் ஓட்டையை அடைத்து விடுகின்றனர். பொது மக்கள் இதுபற்றி கேட்டால் கேட்பவர்கள் மீது வழக்கு மிரட்டல் என எதிர்க்கட்சிகள் கூறுவது போல காவல் துறை ஏவல் துறையாக உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் அதிகமாக விற்பனையில் அள்ளிக் செல்வ செழிப்பில் செல்வ சீமான்களாக இருக்கிறார்கள். இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்?,நம் நாட்டின் கனிம வளத்தை கொள்ளை லாபத்தில் கொடுக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? கொள்ளைக்கு துணைப்போகும் அதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நேர்மையான அதிகாரிகளின் மனவேதனை அறிய முடிகிறது.

வேலூர் ராணிப்பேட்டை ஜோலார்பேட்டை ஆற்றில் அள்ளப்படும் மணல் பெங்களூர் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வெட்டவெளிச்சமாக லாரியில் கடத்தப்படுகிறது. அப்படியும் அந்த லாரியை பிடித்தால் லாரி உரிமையாளர் ஒன்று ஆளுங்கட்சியாக சேர்ந்தவராக இருப்பார் இல்லையென்றால் செல்வாக்கு உடையவராக இருப்பார். இதற்கு முடிவுஎட்டப்படுமா என பொது மக்களுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்.

படங்கள் : சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *