• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தண்ணீர் தொட்டியில் உள்ள சேதம் அடைந்த குழாயை சரி செய்ய கோரிக்கை..,

ByP.Thangapandi

May 31, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 3000 லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டி உள்ளது.,

இந்நிலையில் வைகை அணையில் தண்ணீர் பற்றாக்குறையால் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.,

இதனால் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது., இதனால் ஆழ்துளை குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தொட்டியில் நிரப்பி மின் மோட்டார் (சின்டெக்ஸ் டேங்க் ) மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.,

இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் உள்ள குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வழிந்து செல்கிறது.,

இதனை உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் தொட்டியில் உள்ள சேதம் அடைந்த குழாயை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,