• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா..,

ByK Kaliraj

May 31, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு கும்மி அடித்த குழந்தைகளுக்கு மற்றும் 10ஆம்,12ஆம் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெ‌ற்றது.

இவ்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் திரு.K.S.சண்முகக்கனி B.com.,D.Co-op., அவர்கள் பாராட்டுகளை வழங்கி மற்றும் இரவு உணவு வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒ.மேட்டுப்பட்டி இந்து மறவர் சமுதாய தலைவர் காளிராஜ், ஒ.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் கந்தசாமி,விருதுநகர் DCTO திருமதி.செண்பகலட்சுமி முத்துக்குமார்,ஆசிரியர் முருகலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.