• Tue. Sep 17th, 2024

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியாகாந்தியின் பிறந்தநாள் விழா

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தியின் 76வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் டாக்டர் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்றது. மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் பூந்துறை அங்காளம்மன் திருக்கோவிலில் அபிஷேகமும், பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பூந்துறை நால்ரோட்டில் உள்ள தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டிக்காட்டு வலசில் மாபெரும் மருத்துவ முகாம் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செந்தமிழ் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வெற்றி ஸ்போர்ட்ஸ் கிளப் இளைஞர்களுக்கு தேவையான விளையாட்டு கருவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முத்துக்குமார் ஆகியோரும், வட்டார தலைவர்கள் மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, மொடக்குறிச்சி வடக்கு ரவி, கொடுமுடி மேற்கு டிஸ்கோ முருகேஷ், சென்னிமலை வடக்கு சண்முகம், பெருந்துறை ராவத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன், சட்டமன்ற தலைவர் பிரபு, விவசாய அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணன், அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பு மாவட்ட தலைவர் செந்தில்குமார், வடுகப்பட்டி தலைவர் விஸ்வநாதன், மொடக்குறிச்சி பேரூர் தலைவர் மூர்த்தி, நிர்வாகிகள் குமார், தவுலத், அலாவுதீன் வட்டாரத் துணைத் தலைவர் அருண், வாத்தியார் பிரகாசம், புல்லட் மணி, பாபு, முத்து, செந்தில்நாதன், சென்னியப்பன், நல்லசிவம், மாவட்ட பொதுச் செயலாளர் சீதாபதி, கவுன்சிலர் சிவசங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மதியம் கொடுமுடி பேரூர் தலைவர் பாபு தலைமையில் கொடுமுடி மசூதியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் பெருந்திரளான காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். அந்நிகழ்ச்சியில் செந்தில்குமார் பொன்னுச்சாமி வேலவன் மனோஜ் காளிதாஸ் தீபன் பாலகுமார் திருவேங்கடம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *