பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர், கெம்பநாயக்கன் பாளையம், அரியப்பம் பாளையம் உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு,சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளை கண்டித்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் எஸ்.கே.நடராஜன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ் பவானிசாகர் ஒன்றிய செயலாளார் வி.ஏ.பழனிச்சாமி மற்றும் 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.