

பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இபிஎஸ்க்கு கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் . ஓபிஎஸ்க்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரை சந்திக்க இபிஎஸ் நேற்று முன் தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் வரை பேசியுள்ளார். இந்தநிலையில் காலமான தனது மனைவிக்கு திதி கொடுப்பதற்காக காசி சென்றுள்ள ஓபிஎஸ் அங்கிருந்து டெல்லி சென்று பிரதமர் மோடி,அமித்ஷா இருவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இபிஎஸ்க்கு கிடைக்காத வாய்ப்பு ஓபிஎஸ்க்கு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
