• Thu. Apr 25th, 2024

இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி – ஒப்பந்தம் கையெழுத்தானது..

Byகாயத்ரி

Mar 9, 2022

இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நான் முதல்வர் திட்டத்தை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக மார்ச் 1ம் தேதி முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச எழுத சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் நேர்முகத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆணையர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன், தொழிலாளர் நலத்துறை செயலாளர்கிர்லோஷ் குமார், இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் உலகெங்கும் இளைஞர்கள் தடையின்றி செல்ல, ஆங்கில மொழியை கற்கும் கல்வி மற்றும் கலாசாரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிற்சி தரமான கல்வி மற்றும் சர்வதேச தரத்திலான மதிப்பீடுகளை இளைய சமுதாயத்திற்கு அளிக்கவும் வழிவகுக்கும். இங்கிலாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரத்தியேக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு சிறப்பு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *