• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் தங்களது புகார்களை தெரிவித்த பொதுமக்கள்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 15, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் குறைகள் மற்றும் தங்களின் பகுதியில் வெகு நாட்களாக சரிசெய்யப்படாத பொது பிரச்சினைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

மேலும் இன்று 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அந்த மனுவின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.