

44 வது செஸ் ஒலிம்பியாட்போட்டியை துவக்கிவைக்க பிரதமர் மோடி இன்றுமாலை சென்னை வரவுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் தொடக்க விழாவில் பங்கேற்க ஆவலுடன் காத்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர் சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.இந்த நிகழ்ச்சியில் இரவு 7.30 மணி வரை பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை சிறப்பு காவல் படை 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு வருகை தருவது குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

