• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திருவேடகத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் ஆபி உதயகுமார் சிறப்புரை..,

ByKalamegam Viswanathan

Jul 11, 2026

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சோழவந்தான் அருகே திருவேடகம் சிபிஆர் அருவுகம் மஹாலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சி பி ஆர் மணி என்ற பெரியசாமி தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம் மகேந்திரன் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் மலையாளம் பேரூர் செயலாளர் வாடிப்பட்டி டாக்டர் அசோக் குமார் மாணவரணி மாவட்ட செயலாளர் சோழவந்தான் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல் லட்சுமி பொதும்பு ராகுல் பொதுக்குழு நாகராஜ் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி இரும்பாடி ராஜேந்திரன் நாச்சிகுளம் தங்கப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் அம்மா பேரவை வாவிட மருதூர் ஆர் பி குமார் சோழவந்தான் பத்தாவது வார்டு மணி ராமு செழியன் மகளிர் அணி சாந்தி மாரிமுத்து பண்ணைகுடி மகாராஜன் பேரூர் துணைச் செயலாளர் தியாகு சரத் பிரேம் மன்னாடி மங்கலம் ராஜபாண்டி ராமு ஊத்துக்குளி சண்முகம் தாமோதரன் பட்டி துரைப்பாண்டி பேட்டை பாலா பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.