• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்..,

Byமுகமதி

Jul 13, 2026

புதுக்கோட்டையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

13.7.2026. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் முன்னாள் மத்திய மாநில அமைச்சர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்த நாள் விழா விஷேச பிரார்த்தனைகள் அர்ச்சனைகள் செய்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ராயல் முருகேசன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆலங்குடி தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர்கள் வேங்கை அருணாசலம், செம்பாட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செம்பை மணி, தமிழ்ச் செல்வன், மாநகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மதன் கண்ணன், வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன், மாநகரத் துணைத் தலைவர்கள் திருவப்பூர் மணி, ஆறுமுகம், நாச்சிமுத்து, மாவட்ட கலைப் பிரிவுத் தலைவர் மேப் வீரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் கோபால் தினேஷ் குமார், தகவல் தொடர்பு அணியின் தலைவர் சரவணன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அணியின் தலைவர் ராஜகோபால், ஜெய்சங்கர், ராஜ குளத்தூர் ஆரோக்கியசாமி, திருவப்பூர் நாகராஜன், சண்முக சுந்தரம், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விலும் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டாரக் காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் முன் நின்று செய்திருந்தார்.