புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ரா கோட்டை சேர்ந்தவர் அரவிந்த், இவர் சிங்கப்பூரில் வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை தனது சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்யலாம், என இருந்த நிலையில் புதுக்கோட்டை மேல இரண்டாவது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் நண்பர்களாக பழகினார்கள்.

பின்னர் என்னிடம் நான்கு கார்கள் உள்ளது அதனை அடமானம் வைத்துக் கொண்டு எனக்கு 8,50,000 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டனர். மேலும் அதற்கு வட்டியும் தருவதாக ஆசைவார்த்தை கூறி பெற்று சென்றனர். பின்னர் அவர்கள் அவர்களிடம் உள்ள நான்கு கரையும் எனது செட்டில் நிறுத்திவிட்டு சாவியை என்னிடம் ஒப்படைத்து சென்றனர். பின்னர் நான்கு மாதம் கழித்து அந்த வாகனங்களை கொடுங்கள் ஒரு சர்வீஸ் செய்து தருகிறேன்.
அதனை வாடகைக்கு விட்டு நல்லபடியாக சம்பாதிக்கலாம் என கூறியதின் பெயரில், நம்பிக்கை அடிப்படையில் அந்த நான்கு காரையும் அவரிடம் ஒப்படைத்து விட்டேன். காரை எடுத்துச் சென்றவர் திருப்பி தரவே இல்லை பலமுறை அவரது வீட்டிற்கு சென்று கேட்ட பொழுது இதோ தருகிறேன், அதோ போகிறேன் என என பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்தார். இதனால் சந்தேகம் அடைந்த நான் பின்னர் வற்புறுத்தி கேட்கவே அவரது மனைவி பாண்டியம்மாள் நீங்கள் தொடர்ந்து எங்களிடம் பணம் கேட்டு இங்கு வந்தீர்கள் என்றால் உங்கள் மீது என்னை கையை பிடித்து இழுத்தாய் என காவல் நிலையத்தில் புகார் செய்வேன் என மிரட்டினார்.
மேலும் ஸ்ரீதரும் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் மன உளைச்சலுக்கான அரவிந்த் வல்லத்ரா கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணாவிடம் நான் கொடுத்து ஏமாந்த பணங்களை பெற்று தருமாறு புகார் மனு அளித்தார். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருணா இப் புகார் மீது நிச்சியம் நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்ததாக அரவிந்த் தெரிவித்தார்.




