• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கரூரில் பணி நியமன ஆணை வழங்கியிருப்பது முதல்வரின் சுயநலத்தை காட்டுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

BySeenu

Jul 11, 2026

கோவை மாவட்டம் பீளமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

கோவை மாவட்டத்தில் நடைபெறும் பாஜக விவசாய அணியின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3084ஏக்கர் கோவில் நிலத்தை, மாவட்ட அலுவலகப் பரிந்துரையுடன் அவசர அவசரமாக பட்டா போட்டுத் கொடுத்துள்ளனர்.முதல்வர் ஜோசப் விஜய் இந்து கோவில்களின் நிலங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்துள்ளார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்து கோவில் நிலங்களை முறைகேடாக பட்டா போட்டுக்கொடுத்த தமிழக அரசின் இந்தச் செயலை பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.இதனை எதிர்த்து அறநிலையத்துறையைக் கண்டித்து பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.அரசு பணி நியமனங்கள் ஒரு வகையான லஞ்சமே மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில், விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலைகள் வழங்கப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளன.

தகுதியான பலருக்கு வேலை வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
ஆனால் தற்போதைய கூட்டணிக் கட்சிகளின் சுயநலத்திற்காக, ஏற்கனவே இறந்தவர்களின் பெயர்களில் அரசுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன

மேலும் அண்மையில் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு முதல்வர் விஜய் பணி நியமனங்களை வழங்கியிருப்பது கூட ஒரு வகையான லஞ்சமே ஆகும்”
என்று குற்றம் சாட்டினார்.

விவசாயிகளுக்கான உர மானியம் மற்றும் உரக்கடத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மத்திய அரசு அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக குறைந்த விலையில் மானியத்தில் வழங்கி வருகிறது. உரக்கடத்தல் விவகாரம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்துவிட்டு அதற்குரிய விரிவான பதிலை அளிக்கிறேன்” என்றார்.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசுகையில், திருமாவளவன் தொடர்ந்து தனது பேச்சை மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்.அவர் என்ன எண்ணத்தில், எந்த நோக்கத்தில் இப்படிப் பேசுகிறார் என்றே தெரியவில்லை என்று தெரிவித்தார்