• Fri. Apr 19th, 2024

இந்த மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.. குமரியில் அதிரடி உத்தரவு!

School

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர்.இந்நிலையில் குமரி மாவட்டத்திலும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து குமரி மாவட்ட பள்ளியில் படிக்கும் கேரள மாணவர்களுக்கு அனுமதியில்லை என அறிவித்துள்ளது.

மேலும் ,கல்லூரி மாணவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி அறிவித்து.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 483 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள இடவசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிறுமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிறகு தான் வகுப்புக்குள் அனுப்பப்படுகின்றனர். அதே போல் பள்ளியே விட்டு மாணவர்கள் வெளியே செல்லும்போது கூட்டம் கூடாமல் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கப்பட்டு குமரி மாவட்டத்தில் பள்ளிகள் 50 சதவீத மாணவர்களை கொண்டே வகுப்புகள் நடத்தபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் குமரி பள்ளியில் படிக்கும் கேரள மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தற்போது தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் கேரள மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதைப்போல் கல்லூரி மாணவர்கள் 2 டேஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தி கொண்டால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *