நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாய சேசாவே’ படத்தின் இணைந்து நடித்திருந்தனர். அப்போதில் இருந்து, இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்களது பிரிவு ரசிகர்களை மட்டுமில்லாது திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், திருமண புடவையை நாகசைதன்யா குடும்பத்திற்கே திரும்பி அனுப்பி அதிர்ச்சியை கொடுத்தார் சமந்தா.
இதையடுத்து, நாகசைதன்யா 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், சினிமாவில் இருப்பவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றும் இதனால் பெண் பார்க்கும் படலத்தை அவரின் பெற்றோர்கள் தொடங்கிவிட்டதாக இணையத்தில் தகவல்கள் காட்டுத் தீ போலபரவி வந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாகசைதன்யா இது உண்மை இல்லை என்றும், சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்பூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக வதந்தி பரப்புவது வருத்தத்தை அளிப்பதாகவும், தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும் நாகசைதன்யா கூறியுள்ளார்.