நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் மேலும் ஆண்டுக்கு 6 கிராமசபைகூட்டம் நடத்த படும் .எனவும் முதல்வர் அறிவிப்பு
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. .
சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், பேசிய போது திமுக ஆட்சி அமைக்கும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை ஏற்கனவே நடத்தப்பட்டு வருகிறது . இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22 தண்ணீர் தினம் கொண்டாடப்படும் என்றும்,மேலும் நவம்பர் 1 உள்ளிட்ட ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.
1,19,000 ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரசின் அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவர் என கூறினார். அமர்வுப்படி தொகை மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு 5 மடங்கு உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சிறந்த ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது 2022ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
நவ.1 உள்ளாட்சி தினம்.. சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
