• Sun. Oct 1st, 2023

ஒரே கம்பெனி.. 84 ஆண்டுகள்… 100 வயது மனிதர் கின்னஸ் சாதனை…

Byகாயத்ரி

Apr 22, 2022

பிரேசில் நாட்டின் பிரஸ்க் நகரைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேன் என்பவர், ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 100 வயது நிரம்பிய ஆர்த்மேன் துணி ஆலையில் பணிபுரிந்து இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளார்.

துணி உற்பத்தி நிறுவனத்தில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்த ஆர்த்மேன் படிப்படியாக உயர்ந்து நிர்வாக பதவிக்கு வந்து, இறுதியில் விற்பனை மேலாளராக ஆனதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. விரும்புவதை செய்து துரித உணவுகளில் இருந்து விலகியிருந்தால் நீண்ட காலம் நிறைவான தொழில் வாழ்க்கை சாத்தியம் என்கிறார் ஆர்க்மேன். மேலும், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்கும்படி இளைஞர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். ‘நான் உண்மையில் உப்பு மற்றும் சர்க்கரையைத் தவிர்க்கிறேன். குடலை காயப்படுத்தும் விஷயங்களை தவிர்க்கிறேன். கோக் மற்றும் பிற சோடாக்களையும் தவிர்க்கிறேன். நல்லதை மட்டுமே உட்கொள்கிறேன். இப்படி செய்வதால் உடல் எப்போதும் வலுவாக இருக்க உதவுகிறது’ என்றார் ஆர்க்மேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *