• Sat. Apr 20th, 2024

முறைகேடாக வெளிநாடுகளில் சொத்து – மறுக்கும் சச்சின் தரப்பு!..

Byமதி

Oct 4, 2021

‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பிரபலங்களின் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநர் மிரின்மோய் முகர்ஜி கூறுகையில், ” சச்சினின் முதலீடுகள் சட்டப்பூர்வமானது மற்றும் அவரது வருமானத்திலிருந்தே செலுத்தப்பட்டது. இதன் வரி முறையாக கணக்கிடப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்திய ஆவணங்கள் தெளிவாக இருப்பதால், அறிக்கையில் குறிப்பிட்டது போல, எவ்வித குற்றச்செயல்களில் சச்சின் ஈடுபடவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *