• Thu. Apr 25th, 2024

நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்கியது நீதிமன்றம்

ByA.Tamilselvan

Oct 20, 2022

நிரவ் மோடியின் சொத்துக்களை கைப்பற்ற அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி, 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார்.இதையடுத்து நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன.மேலும் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடிக்கு சொந்தமான ரத்தினங்கள், நகைகள் என ரூ. 924 கோடிசொத்துக்களை அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நிரவ் மோடியின் 22 கார்கள், மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என 48 சொத்துக்கள் முடக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *