• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,418 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.