• Sun. Dec 10th, 2023

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Sep 30, 2022

குடைமிளகாய் புதினா புலாவ்:

தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – ஒரு கப், குடைமிளகாய் – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, புதினா, கொத்த மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி – பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறவும். தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சூப்பரான குடை மிளகாய் புதினா புலாவ் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *