• Sun. Mar 26th, 2023

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jul 21, 2022

 தோசை சுடும் முன்பு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெயும், உப்பும் கலந்து தேய்த்தால் தோசை சுட அதிக எண்ணெய் தேவைப்படாது.
 சாம்பார் அதிக நேரம் கெட்டுப் போகாமலிருக்க பருப்பு வேக வைக்கும்போது அதனுடன் 2 கிராம்பு சேர்க்கவும். சாம்பார் கூடுதல் மணத்துடன் இருக்கும்.
 தோசை மாவில் தேங்காய்ப்பால் கலந்து தோசை வார்த்தால், தோசை வாசமாகவும், அதிக சுவையுடனும் இருக்கும்.
 அரிசி உப்புமா செய்யும்போது தேங்காய் இல்லையா, அல்லது குறைவாக உள்ளதா, கவலை வேண்டாம். தாளிக்கும் எண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் தேங்காய் சேர்த்த அதே வாசனையுடன் ருசியிலும் குறைவிருக்காது.
 நெடி அடிக்காமல் மிளகாய் வற்றலை வறுக்க, வத்தலின் காம்பை ஒடித்துவிட்டு பின் வறுத்தால் நெடி அடிக்காது.
 இட்லிக்கு ஆட்டிய மாவில் 4 வெற்றிலைகளின் காம்பை நீக்கி விட்டுப் போட்டால் பொங்கி வழியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *