ராஜ்மா கிரேவி:
தேவையான பொருட்கள்:
ராஜ்மா (சிகப்பு காராமணி) - அரைக் கிலோ, வெங்காயம் - 4, தக்காளி - 3
பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல், மிளகாய்த்தூள் – 4 மேசைக்கரண்டி, மல்லித்தூள் – 3 மேசைக்கரண்டி, கரம் மசாலா தூள் – ஒரு மேசைக்கரண்டி, சீரகம் – ஒரு தேக்கரண்டி, பிரியாணி இலை – 2, வெண்ணெய் – ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லி தழை – ஒரு பிடி, எண்ணெய் – கால் கப், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
ராஜ்மாவை 6 , 7 மணி நேரம் ஊற வைத்து பின்பு குக்கரில் போட்டு வேக வைத்து நீரை வடித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பெரிதாக வெட்டிக் கொள்ளவும். பின்பு வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதை தனியே வைக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பின்பு அரைத்த வெங்காய விழுதை சேர்த்து சுருள வதக்கவும். நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் வெண்ணெய், மிளகாய்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். நன்றாக கிளறி நிறம் மாறியதும் தக்காளி விழுதை சேர்த்து கிளறி கொதிக்க விடவும். கொதித்து கெட்டியாகும் நேரத்தில், கொத்தமல்லி தழை, வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து பின் இறக்கவும். ராஜ்மா கிரேவி தயார். சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு நல்ல சைடு டிஷ். ராஜ்மாவிற்கு பதிலாக கொண்டைக்கடலையிலும் செய்யலாம்.