• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jun 27, 2022

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து… நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.